தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது: கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரணமாக  சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் மருத்துவ ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக வள்ளுவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என்று ஐநா சபை, உலக வாங்கி, இந்தியா சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வடமாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி தேசிய சராசரியா விட அதிகமாக உள்ளதாகவும்,  அதே நேரம் தென் மாநிலங்கள் மிகவும் குறைவாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கியம் காரணம் குழந்தைகளை பிறப்பு விகிதம் குறைந்ததே என கூறப்படுகிறது. குழந்தை பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1.40 சதவீதமாக உள்ள நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் காரணமாக நீண்ட காலத்தில் சமூக, மருத்துவ, அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர் அமலுருபுவனத்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை பிறப்பு, இறப்பு பதிவு இணையதளத்தின் உள்ள புள்ளி விவரங்களின்படி 2020-இல் 4,76,054 ஆண்கள், 4,48,171 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 9,24,256 பேர் பிறந்து இருக்கிறார்கள். கடந்த 2021-இல் மொத்தம் 9,12,869 பெரும், 2022-ல் மொத்தம் 9,36,361 பெரும், 2023-இல் மொத்தம் 9,02,329 பெரும், 2024-இல் மொத்தம் 8,47,668 பேர் பிறந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொரோன ஊரடங்கு காரணமாக 2022-இல் மட்டும் கூடுதலாக பிறப்பு விகிதம் இருந்துள்ளது. 2023-இல் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டு 54,661 குழைந்தைகள் குறைவாக பிறந்துள்ளனர். இதனால், கல்வி மற்றும் பொருளாதாரம் ரீதியாக வளர்ந்துள்ள மாநிலத்தில் பிறப்பு விகிதகம் குறைந்து இருப்பதை பொது வெளியில் பேசும் பொருளாக எடுத்து சென்று மாற்றுவது மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று வள்ளுவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Warning of social and economic impact due to declining birth rate in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->