நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் மரணத்திற்கான இழப்பீடு அதிகரிப்பு..! - Seithipunal
Seithipunal


2025 - 2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி, இயற்கை மரணத்துக்கான நிதி உதவி மற்றும் இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பின் படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1 இலட்சம் என்பதை ரூபாய் 02 இலட்சம் என்றும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதிஉதவி ரூபாய் 20 ஆயிரம் என்பதை ரூபாய் 01 இலட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூபாய் 20 ஆயிரம் என்பதை ரூபாய் 30 ஆயிரம் என்றும், இறுதிச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூபாய் 2,500 என்பதை ரூபாய் 10 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை 04.08.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Increase in compensation for the death of landless agricultural workers


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->