ஆமா...இதான் என் role... தெரிஞ்சுதான் நடித்தேன்...!- அமீர்கான் - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'கூலி'.இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மேலும், அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்களிடையே,கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இப்படத்தில்  ரஜினிக்கு அமீர்கான் பீடி பற்ற வைத்து விடுவது போல் காட்சி இருந்தது. இந்த காட்சியை பலர் பலவிதமாக விமர்சித்து கருத்து பதிவிட்டனர்.

உச்சத்தில் இருக்கும் பாலிவுட் நடிகரை அழைத்து வந்து ரஜினிக்கு பீடி பற்ற வைக்க வைத்துவிட்டார் லோகேஷ் என கருத்துக்கள் வெளியானது.கூடுதலாக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் அமீர்கான் ஏன் நடிக்க சம்மதித்தார் எனவும் கேள்வி எழுப்பினர்.

இதில் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமீர்கான், “ஆமாம் கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பது தான் எனது வேலை. அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நான் படு தீவிரமான ரஜினி ரசிகன். அவருடன் இணைந்து நடிப்பது என்பது எனக்கு பெரிய பெருமை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், "கூலி" படத்திற்காக அமீர்கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "ரஜினி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்புமுள்ளது. எனவே அவருடன் நடித்ததே எனவே பெரிய பரிசு.அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என்று தெரிவித்தார்.இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yes this is my role I acted knowingly Aamir Khan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->