அனிருத் இசை நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து வரும் தடைகள்...! காரணம் என்ன?
Anirudhs concert facing successive obstacles What reason
பிரபல இசையமைப்பாளர் அனிருத் அவர்கள், 'ஹூக்கும்' என்ற இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி சாதனை படைத்தது.இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு காரணங்களால் அரசு அனுமதி தரவில்லை.

இதன்காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்த அனிருத், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வருகிற 23ம் தேதியன்று அதாவது நாளை கிழக்கு கடற்கரை சாலையில் 'கூவத்தூர்' பகுதியில் அமைந்துள்ள 'மார்க் சொர்ணபூமி' எனும் இடத்தில் நடைபெறுகிறது' என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கூவத்தூரில் நாளை நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை எம்.எல்.ஏ. பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்தனர்.
இந்நிலையில் எம்.எல். ஏ. தரப்பில் , மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் அருனித் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Anirudhs concert facing successive obstacles What reason