நான் தனி ஆள் இல்லை, கடல்... விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்!
TVK Vijay manadu video viral madurai
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய், ஆகஸ்ட் 21 அன்று மதுரை பாரபத்தியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் எடுத்த செல்ஃபி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்வில் விஜய் கூட்டத்தில் இருந்தபோது செல்ஃபி வீடியோ எடுத்தார். அதை தற்போது வெளியிட்டு, “உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான், உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான், உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்” என்று குறிப்பிட்டுள்ளார். இது மாநாட்டில் வெளியான பாடலின் வரிகளை பிரதிபலிக்கும் விதமாக பதிவிடப்பட்டது.
மேலும், விஜய் தனது திரைப் பயணத்தை நிறைவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படமே அவரது கடைசி படமாகும். அரசியல் வாழ்வில் முழுமையாக கவனம் செலுத்தும் நோக்கத்துடன் அவர் தற்போது கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
English Summary
TVK Vijay manadu video viral madurai