குமரியில் பகீர் சம்பவம்: காதல் திருமணம் செய்த இளைஞர் தலையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள மாமனார்..!
In kanyakumari a young man who had a love marriage was killed by his father-in-law by throwing a stone at his head
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சிபின். இவருக்கு 25 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடி புதூர் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகள் சகாயசிபாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
குறித்த காதல் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கணவனிடம் கோபித்துக்கொண்டு சகாயசிபா தனது தந்தை வீட்டிற்கு அடிக்கடி சொல்வது வழக்கம். இதே போல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவருடன் சண்டை போட்டு விட்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று சகாயசிபா தங்கியுள்ளார்.

இதனையடுத்து, மருமகன் சிபின் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை வீட்டின் மாடியில் இருந்து கவனித்த மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்த படியை மருமகன் இடம் சண்டைப் போட்டுள்ளார்.
அத்துடன் தன் வீட்டிற்கு வரக்கூடாது என்றும் சிபினை திரும்பி சென்று விடுமாறு கூறியுள்ளார். இதனால் மாமனார் மருமகன் இடையை வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாமனார் மாடியில் இருந்த ஹலோப்ளாக்' கல் ஒன்றை எடுத்து கீழே வாசலில் நின்ற மருமகனின் தலையில் போட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத சிபின் தலையில் கல் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தவெள்ளத்தில் மாமனார் வீட்டு வாசலில் சுருண்டு விழுந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிபினை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அங்கு சிபினுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஞானசேகரனை அஞ்சுகிராமம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த வழக்கை கொலைவழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தம்பதி இடையில் குடும்ப பிரச்சனையில் மருமகன் தலையில் மாமனார் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
In kanyakumari a young man who had a love marriage was killed by his father-in-law by throwing a stone at his head