ரெடியா...'டியூட்' படக்குழு வெளியிட்ட அடுத்த அப்டேட்...!
Ready next update released by Dude film crew
தமிழ் திரையுலகில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றியை கண்டவர் ''பிரதீப் ரங்கநாதன்''. அண்மையில் இவரது நடிப்பில் 'டிராகன்' படம் வெளியாகி ரசிகர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி(LIK )'என்ற படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்.மேலும், 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'மமிதா பைஜு' நடித்துள்ளார். இளம் வயது இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் 'சரத் குமார்' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இது முற்றிலுமாக காமெடி கலந்த படமாக தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில், தற்போது படக்குழு 'டியூட்' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று மாலை 06.03 மணியளவில் இப்படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல்.
English Summary
Ready next update released by Dude film crew