சோகத்தில் திரையுலகம்.. பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.!!
actor jaswinder bhalla passed away
பஞ்சாபி திரையுலகைச் சேர்ந்தவர் பிரபல காமெடி நடிகர் ஜஸ்விந்தர் பல்லா. இவர் சமீப காலமாக மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சுமார் முப்பது ஆண்டுகளாக திரையுலகில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற ஜஸ்விந்தர் பல்லாவின் இந்த திடீர் மரணம் பஞ்சாபி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் பல்லாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் நாளைக்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துல்ஹா பட்டி, ஜாட் அண்ட் ஜூலியட், சர்தார் ஜி மற்றும் கேரி ஆன் ஜட்டா போன்ற மிகப்பெரிய பஞ்சாபி வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா படத்தில் நடித்துள்ளார்.
English Summary
actor jaswinder bhalla passed away