ட்ரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்த 'மதராஸி' படக்குழு... எப்போ தெரியுமா?
Madraasi team has announced date audio launch trailer only Do you know when
தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர்விக்ராந்த், வித்யூத் ஜம்வல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.இதில் முக்கிய அறிவிப்பாக படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்க இருக்கிறது என்ற நிலையில் அதனை தற்போது அதிகாரபூர்வமாக படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.
அவ்வகையில் படக்குழு இசை மற்றும் டிரெய்லரை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. மேலும்,படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
English Summary
Madraasi team has announced date audio launch trailer only Do you know when