நடுவானில் பறந்த விமானத்தின் முகப்பு கண்ணாடியில் விரிசல்: விமானி காயம்; அவசரமாக தரையிறக்கம்..!
The windshield of a plane that crashed in mid air cracked
அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தின் முகப்பு கண்ணாடியில் திடீரென பொருள் ஒன்று மோதியுள்ளது. இதனால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதுடன், காக்பிட்டிலும் சேத்தை ஏற்படுத்தியதோடு, விமானிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த விமானம் சால்ட் லேக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், விமானிகள் மாற்று விமானம் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானத்தின் மீது விண்வெளி குப்பை மோதியிருக்கலாம் என ஒரு கூறப்படுகின்ற நிலையில், அதேநேரத்தில் விமானத்தின் மின்னணு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இல்லையெனில், பறவைகள் உள்ளிட்டவையும் மோதியிருக்கக்கூடும் என்ற யூகமும் கிளம்பி உள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெறுகிறது.
English Summary
The windshield of a plane that crashed in mid air cracked