அடுத்த அல்லு அர்ஜுன் யார் தெரியுமா..?- பந்த்லா கணேஷ் பிரமாண்ட தீபாவளி விழாவில் பாராட்டு மழை!
Do you know who the next Allu Arjun is Bandla Ganesh receives a shower of compliments at the grand Diwali celebration
ஒருகாலத்தில் நடிகராக பிரபலமடைந்து, தற்போது வெற்றிகரமான தயாரிப்பாளராக திகழும் பந்த்லா கணேஷ், ஐதராபாத்தில் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களுக்காக பிரமாண்டமான தீபாவளி விழாவை நடத்தினார்.
இந்த பிரம்மாண்ட விருந்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், தேஜா சஜ்ஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெர்சல் காட்டினர்.இந்த நிகழ்வின் போது பந்த்லா கணேஷ் பேசும் போதே, இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜாவை “இந்திய சினிமாவின் அடுத்த அல்லு அர்ஜுன்” என புகழ்ந்தார்.

மேலும், சமீபத்தில் வெளியான ‘மிராய்’ படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த தேஜா சஜ்ஜா, தற்போது இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் ‘ஜாம்பி ரெட்டி 2’ படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த படம் 2027 ஜனவரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
English Summary
Do you know who the next Allu Arjun is Bandla Ganesh receives a shower of compliments at the grand Diwali celebration