பாகிஸ்தானில் 15 வயது காது கேளாத, வாய் பேசமுடியாத இந்து சிறுமி கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்து கட்டாயத் திருமணம்!
Pakistan hindu girl kidnaped
பாகிஸ்தானில் 15 வயது காது கேளாத, வாய் பேசமுடியாத இந்து சிறுமி கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்து கட்டாயத் திருமணம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து மாகாணத்தின் பதின் மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரைச் சேர்ந்த சிறுமி ஒன்பது நாட்களுக்கு முன் மர்மமாக காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் விசாரணை முன்னேறாமல் இருந்த நிலையில், நேற்று அந்த சிறுமி பதின் பத்திரிகையாளர் கழகத்தில் திடீரென தோன்றினார்.
அவருடன், தன்னைத் திருமணம் செய்ததாக கூறிய வயதான முஸ்லிம் நபரும் வந்திருந்தார். மேலும் சிறுமி இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறியதாகக் காட்டும் சான்றிதழும் வெளியிடப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, இது முழுமையாக கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் என்று குற்றம்சாட்டினர்.
அந்த நபர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவரும், ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையுமாக இருப்பதாக சிறுமியின் குடும்பம் தெரிவித்துள்ளது. “எங்கள் மகள் கேளாதவர், பேசமுடியாதவர். அவர் எப்படி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க முடியும்?” என பெற்றோர் கேள்வி எழுப்பினர்.
தரவார் இட்டேகாத் பாகிஸ்தான் என்ற மைனாரிட்டி உரிமை அமைப்பின் தலைவர் சிவா கச்சி, “இந்த வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர். சிறுமி விருப்பத்துடன் இதை செய்திருக்க முடியாது. எங்கள் வழக்கறிஞர்கள் இதை நீதிமன்றத்தில் எடுத்துச் செல்ல தயாராக உள்ளனர். சீனியர் போலீஸ் அதிகாரிகளிடம் தனி விசாரணைக்கான கோரிக்கை அனுப்பியுள்ளோம்,” என கூறினார்.
English Summary
Pakistan hindu girl kidnaped