41 பேர் மரணங்களுக்கு விஜய் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் - திமுக!
DMK spokesperson TKS Elangovan blamed TVK Vijay 41 deaths Karur stampede
கரூரில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவஜ்ரத்தில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அந்த நிகழ்வுக்கு விஜயே காரணம் என குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறியதாவது: “விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்தன. அவர் மதியம் 12 மணிக்கு வருவதாக கூறியிருந்தார். குறைந்தது 1 மணிக்குள் வந்திருக்கலாம். ஆனால் அவர் தாமதமாய்ச் செயல்பட்டதால் தான் இந்த துயரம். ஆகவே 41 மரணங்களுக்கும் விஜய் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையே விஜய் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டதாக அறிவித்தார். அந்த தொகை அக்டோபர் 18 அன்று அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவரின் அந்த அறிக்கையில், “இந்த நிதியுதவி நமது ஆதரவு மற்றும் இரக்கத்தின் அடையாளமாகும். உறவினரை இழந்த குடும்பங்களை நேரில் சந்திக்க சட்ட அனுமதி பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அனுமதி கிடைத்தவுடன் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவோம். இக்கடினமான நேரத்தில் அவர்களுடன் நாங்கள் உறுதியாக நிற்போம். இறைவன் அருளால், இந்த துயரமான சூழ்நிலையை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK spokesperson TKS Elangovan blamed TVK Vijay 41 deaths Karur stampede