பாகிஸ்தானில் திடீர் துப்பாக்கிச் சண்டை! - பாதுகாப்புப் படையினர் 5பேர் உயிரிழப்பு, பலர் காயம்...!
Sudden gunfight Pakistan 5 security personnel killed many injured
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு, இருநாட்டு எல்லைப் பகுதிகளில் தனது கிளை அமைப்புகளை நிறுவி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.

அதே நேரத்தில், ‘தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான்’ (TTP) என்ற அமைப்பு, பாகிஸ்தானுக்குள் தாக்குதல்கள் நடத்தி வருவதாகவும் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.இந்த நிலைமையிலேயே சில நாட்களுக்கு முன், இருநாட்டு எல்லையில் கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் இருபுறத்தினரும் உயிரிழப்புகளை சந்தித்தனர்.
பின்னர், கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.ஆனால், அதற்குள் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம், டிரா இஸ்மாயில் கான் மாவட்டம், கொட் லாலு பகுதியில் அமைந்துள்ள அரசு எண்ணெய் நிறுவனம் மீது இன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருந்த பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் தீவிர காயமடைந்தனர்.இந்த கொடூரத் தாக்குதலுக்கு ‘தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பே பொறுப்பேற்றது, இதனால் எல்லைப் பகுதி மீண்டும் பதட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
English Summary
Sudden gunfight Pakistan 5 security personnel killed many injured