இது என்ன லாஜிக் விஜய்? Sympathyயை வைத்து வாக்கு வேட்டையாட முயல்கிறாரா விஜய்? நாதக இடும்பாவனத்தின் நறுக் கேள்விகள்! - Seithipunal
Seithipunal


நாதக இடும்பாவனம் கார்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சிங்கம் தன்னைவிட வலிமை குறைந்த விலங்குகளை வேட்டையாடாது என்கிறார் விஜய். ஆடு, மான், எருமைக்குட்டி, காட்டுப்பன்றி போன்றவற்றை சிங்கங்கள் வேட்டையாடும். அதுவும் பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லும் என்பது அடிப்படை அறிவு. தான் நடிக்கும் படங்களின் கதைகளில் லாஜிக் இல்லாது இருப்பது போல  சொல்லும் கதைகளிலும் லாஜிக் இருக்க வேண்டாம் என நினைத்து விட்டாரா விஜய்?

சண்முகப்பாண்டியனுக்கு வாய்ப்புக் கேட்டும் தராத விஜய்க்கு இப்போது என்ன விஜயகாந்த் மீது திடீர் பாசம்? ரஜினிகாந்த் விஜயகாந்தின் வீட்டுக்கே நேரில்சென்று நலம் விசாரித்தார். அதுபோன்ற சம்பிரதாய நலம் விசாரிப்பைக்கூட செய்யாத விஜய்க்கு இப்போதென்ன திடீர் கரிசனம்? விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, எழுந்துள்ள Sympathyயை வைத்து வாக்கு வேட்டையாட முயல்கிறாரா விஜய்?

'என்னுடைய அண்ணன்' என உரிமையோடு விஜயகாந்தை விளிக்கும் விஜய்,  ஜெயலிதாவுக்கு அரசியலில் அணிலாகக்கூட இருந்தார். ஆனால், விஜயகாந்துக்கு ஓணானாகக்கூட இருந்தது இல்லையே ஏன்?

மதுரை என்றதும் எம்.ஜி.ஆர். எதற்கு நினைவுக்கு வருகிறார் விஜய்க்கு? அவருக்கும், மதுரைக்கும் என்ன சம்பந்தம்? மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தார் என்பதாலா இந்த நினைவூட்டல்?

கொள்கைத்தலைவர்கள் பட்டியலிலேயே இல்லாத எம்.ஜி.ஆரை முன்னிறுத்துவது ஏன்? திராவிட இயக்க அரசியலின் சீரழிவே எம்.ஜி.ஆர்தான் என்பதை அறிவாரா விஜய்?

அண்ணாவின் மாநிலச் சுயாட்சி கோட்பாட்டுக்கு எதிராகவும், பெரியார் ஈவெராவின் பார்ப்பனர் அல்லாதார் அமைச்சரவை என்பதற்கும் எதிராக இருந்தவர் எம்.ஜி.ஆர். என்பதை அறிவாரா விஜய்?

எம்.ஜி.ஆர். மாஸ் என்கிறார் விஜய். அதே எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக, 1980ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிலும், புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், 1986ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி அடைந்த வரலாறு விஜய்க்குத் தெரியுமா?

கச்சத்தீவு குறித்து மோடிக்கு கோரிக்கை வைத்த விஜய், மதுரை மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய முல்லைப்பெரியாறு சிக்கல் குறித்தோ, டெல்டா மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய காவிரி நதிநீர் சிக்கல் குறித்தோ ஏன் வாய்திறக்கவில்லை? சனநாயகன் திரைப்படத்தை கேரளாவிலும், கர்நாடகத்திலும் ஓட்ட முடியாது எனும் முன்னெச்சரிக்கை உணர்வா? 

மதுரையில் மாநாடு நடத்தி, பாஜகவை கொள்கை எதிரி என்ற விஜய், திருப்பரங்குன்றம் மலையை வைத்து பாஜக செய்யும் மதவாத அரசியலை ஏன் கண்டிக்கவில்லை?

திமுகவை அரசியல் எதிரி எனும் விஜய்,  கவின் சாதிய ஆணவப் படுகொலையில் திமுக நடந்துகொண்ட விதத்தையோ, தூய்மைப்பணியாளர்கள் மீதான ஒடுக்குமுறையையோ ஏன் பேசவில்லை?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான தங்கை ஸ்னோலினுக்குத் தான் 'தாய் மாமன்' என்ற விஜய், ஸ்னோலினைக் கொன்ற அதிமுகவின் ஆட்சியாளர்கள் குறித்து தவறியும் ஏன் வாய்திறக்கவில்லை?" ஏன் என்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK idumbavanam condemn to TVK Vijay


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->