உதவி கேட்க போன இடத்தில மலர்ந்த கள்ளக்காதல்..கடைசியில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
The deceitful love that blossomed at the place where help was sought in the endthe cruelty that happened to the young woman
திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய பஞ்சாயத்து தலைவர் உள்பட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் திகம்கர் பகுதியை சேர்ந்த ரச்னா தேவி கணவனை இழந்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரச்னா தேவி ஒரு பிரச்சினை தொடர்பாக முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சஞ்சை பட்டேலிடம் உதவி கேட்டார்.
அப்போது அடிக்கடி அவரை ரச்னாதேவி சந்தித்து வந்தார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி பலமுறை தனிமை யில் சந்தித்து இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ரச்னா தேவி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து கிஷோர் பட்டேலிடம் வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து ரச்னா தேவி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த கிஷோர் பட்டேல், ரச்னா தேவியை தனது மருமகன் சந்தீப் பட்டேலுடன் சேர்ந்து ரச்னா தேவிவை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவரை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரச்னா தேவி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடலை 7 துண்டுகளாக வெட்டி. உடல் பாகங்களை பிரித்து தனிதனி சாக்கு மூட்டையில் வைத்து வீசி சென்றனர். இந்த நிலையில் விவசாயி தனது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து கிணற்றை பார்த்தபோது, ஒரு சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தோடிபதேபூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள லகேரி ஆற்றிலிருந்து அந்த பெண்ணின் தலையை போலீசார் கண்டெடுத்தனர்.
காணாமல் போன தன் அக்காவை தேடிக்கொண்டிருந்த ரச்னா தேவியின் சகோதரன், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை பார்த்து போலீசாரை அணுகினார். அப்போதுதான் நடந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு, கொலை செய்த சஞ்சய் பட்டேல் மற்றும் அவரது மருமகன் சந்தீப் பட்டேலை கைது செய்தனர். கொலைக்கு உதவியாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
The deceitful love that blossomed at the place where help was sought in the endthe cruelty that happened to the young woman