"அச்சச்சோ..." தூங்கினால் இறந்துவிடும் அரியவகை நோய்! 6 வயது சிறுமியின் அவதி! - Seithipunal
Seithipunal


உலகில் எத்தனையோ நோய்கள் இருந்தாலும்  அவ்வப்போது புதிய நோய்கள் தோன்றி  மக்களை அச்சமுடைய செய்து வருகிறது. தற்போது இதே போன்ற ஒரு அரியவகை நோய்  லண்டனில் இருக்கும் சிறுமி  ஒருவரை தாக்கியிருக்கிறது. இந்தச் செய்தி உலகம் எங்கும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

லண்டன் நகரைச் சார்ந்த சாண்டி என்ற ஆறு வயது சிறுமிக்கு தூக்கத்தில் அவரது சுவாசம் நின்று விடுகிறது. இதன் காரணமாக அவர் தூங்கும் போதும் செயற்கை சுவாசத்துடன் தூங்க வேண்டி உள்ளது. இந்த நோயிலிருந்து  சிறுமியை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தச் சிறுமி சென்ட்ரல் ஹைபோ வெண்டிலேஷன் சிண்ட்ரோம் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது  சோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த சிறுமி ஆழ்ந்து உறங்கும் போது அவரது சுவாசம் நின்று விடுமாம். இந்த நோயிலிருந்து சிறுமியை காக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக  மருத்துவர்கள்  சிறுமியின் கழுத்தில் துளையிட்டு  மூச்சுக்குழையிலிருந்து மூளைக்கு சிக்னல்களை அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என  மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a girl from london suffering from central hypo ventilation synrome doctors try hard to save her life


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->