கொரோனாவில் இருந்து தப்பிக்க, மோசமான வேலை செய்து துடிதுடித்து பறிபோன 300 உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் துவங்கிய கரோனா வைரஸ் படிப்படியாக அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. 

மனித இனத்துக்கே பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரசுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800க்கும் அதிகமாக உயர்ந்து இருக்கின்றது. 

இதனை கட்டுப்படுத்த வழி இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் திகைத்து வருகின்றனர. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இந்த நோய் வரும் முன்பு காக்க முடியும் இல்லையெனில் நோய் பரவுவதை தடுக்க இயலாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மெத்தனால் குடித்தால் அது ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்து விடுகின்றது. எனவே,கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற வதந்தி பரவியது.

இதனை நம்பிய ஏராளமானோர் மெத்தனால் அருந்தியிருக்கின்றனர். இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு 300 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தொடர்ந்து ஆயிரம் பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

300 persons death by methanol


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal