முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon kerala
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கதைவிட முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பருவமழை, இம்முறை மே 27-ஆம் தேதியே கேரளாவில் புயல் மற்றும் மழையுடன் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பருவமழை ஏற்கனவே சில முக்கிய பகுதிகளில் உருவாகத் தொடங்கி விட்டதாகவும், அதில் தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் மே 13-ஆம் தேதியளவில் பருவமழையின் ஆரம்ப அமைப்பு உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பருவமழையை முன்னெடுத்து இப்போது காற்றழுத்த மாற்றங்கள், கடலோர வெப்பநிலை மற்றும் காற்றின் வீச்சு அனைத்தும் சாதகமாக உள்ளன. இதன் விளைவாக, மழை சீசன் துவக்கம் இந்த ஆண்டு ஒரு வாரம் வரை விரைந்து இருக்கலாம்.
இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில், விவசாயிகள், மின் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் துறைகள் உள்ளிட்டவை முன்கூட்டியே திட்டமிடலாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.