போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் ஏவுகணை மற்றும் விமான தளங்களை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் சொல்வது அனைத்தும் பொய் என இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன், போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், ராணுவ கமாண்டர் ரகு நாயர் ஆகியோர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.

அப்போது சோபியா குரேஷி கூறியதாவது: இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம், பிரமோஸ் ஏவுகணையை ஜேஎப் 17 மூலம் சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிர்சா, ஜம்மு, பதன்கோட், பதிண்டா, நலியா மற்றும் பூஜ் நகரில் உள்ள விமானபடை தளங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இந்த தகவலும் முற்றிலும் பொய் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சண்டிகர் மற்றும் வியாஸ் நகரில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் சேதம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் தவறான பிரசாரத்தை பரப்புகிறது என்றும், மசூதிகளை இந்தியா சேதப்படுத்தியதாக கூறுவதும் பொய் என்றும், இந்தியா மதசார்பற்ற நாடு. இந்திய அரசியல் மாண்புகளை, இந்திய ராணுவம் அழகாக பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கமாண்டோர் ரகு நாயர் பேசுகையில், கடல், வான் மற்றும் நிலத்தில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்த இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளோம் என்றும், எப்போதும் விழிப்புடனும் தயார் நிலையிலும் முப்படைகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான பிரசாரத்திற்கும் வலிமையான பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படும் மோதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும், நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயார் நிலையல் இருப்போம் என்றும் அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

அடுத்ததாக, விங் கமாண்டர் வியோமிகா சிங் குறிப்பிடுகையில், 
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த மத வழிபாட்டு தலத்தையும் இந்தியா குறிவைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு அளித்த பதிலடியில் அந்நாட்டிற்கு கடுமையான மற்றும் தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நிலம் மற்றும் வானில் ஏராளமான இழப்புகளை ஏற்பட்டுள்ளது. ஸ்கார்து, ஜகோபாபாத் மற்றும் போலாரி என பாகிஸ்தானின் முக்கியமான விமானபடை தளங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள ராணுவ கட்டமைப்புகள், கட்டளை மையங்கள் மற்றும் தளவாடங்களுக்கும் கணிக்க முடியாத சேதம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்புக்கு உருாக்கப்பட்ட ரேடார் மற்றும் ஆயுத அமைப்பு சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Even though there is a ceasefire the three services will always be ready


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->