நீண்ட நாள் தோழியான வன்ஷிகா இன்று திருமணம் முடித்த இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ்..!
Indian cricketer Kuldeep Yadav and Vanshika Chadha got married today
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் (31), தனது நீண்ட நாள் தோழி வன்ஷிகாவை காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் 04-ந் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் குல்தீப் யாதவ்- வன்ஷிகா திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரி மலை பிரதேசத்தில் உள்ள ஐ.டி.சி. கவாய் ஓட்டலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. மாலை 06 மணிக்கு தொடங்கி திருமண சடங்கில் இருவரும் திருமணத்திற்கான 07 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டார்கள்.
இந்த திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் நேற்று நடைபெற்ற மஞ்சள் பூசும் மற்றும் மெகந்தி நிகழ்ச்சியில் (ஹல்தி) விழா விழாவில் கிரிக்கெட் வீரர்கள், குடும்ப நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் தனது வருங்கால மனைவியும், எம்.பி.யுமான பிரியா சரோஜ்யுடன் பங்கேற்றார். யசுவேந்திர சாஹல், சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ராணா, இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பாடகர் கைலாஷ் கெர், நடிகர் குணால் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
Indian cricketer Kuldeep Yadav and Vanshika Chadha got married today