'ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பாக கப்பல்கள் செல்ல போர்க் கப்பல்களை அனுப்புங்கள்'; உலக நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்..!
Trump Urges Global Nations to Deploy Warships to Ensure the Safe Passage of Vessels Through the Strait of Hormuz
அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேயுற்றான் கூட்டு வைத்து அமெரிக்கா கடந்த 28 ஆம் தேதி கலாய் முதல் ஈரான்மீது தாக்குதல் நடத்துகிறது.
இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்துகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை செய்யும் முக்கிய நீர் போக்குவரத்து வழியாக விளங்கும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளதோடு தாக்குதல் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பெற்றோல் டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல பாதுகாப்பு கப்பல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அத்துடன், 'ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக கப்பல்கள் செல்ல போர்க் கப்பல்களை அனுப்புங்கள்' என உலக நாடுகளை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப்பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பி முற்றிலுமாகத் தலை துண்டிக்கப்பட்ட ஒரு தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக அமையாதவாறு செய்வார்கள் என்று நம்புவோம். என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Trump Urges Global Nations to Deploy Warships to Ensure the Safe Passage of Vessels Through the Strait of Hormuz