மனைவி தூக்கில் தொங்குவதை சிரித்தபடி ' நன்றாக தூக்கு மாட்டிக்க' என்று கூறி, வீடியோ எடுத்த கொடூர கணவன்..! - Seithipunal
Seithipunal


கடப்பா மாவட்டம் நந்தலூரு வில்ரெயில் எஞ்சின் டிரைவராக வேலை செய்து வருபவர் ஸ்ரீனிவாசலு. இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கிருஷ்ணவேணி (வயது 30) என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு 02 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், ராஜம்பேட்டை, போயனப்பள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சீனிவாசலு மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மனைவி கிருஷ்ணவேணி தனது கணவரிடம் கடந்த 06 மாதங்களாக தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ தினமாக நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில்,  கிருஷ்ணவேணி கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டிக்கொள்ள முயன்றுள்ளார்.

அப்போது அறைக்கு வெளியே இருந்து இதனை பார்த்த சீனிவாசலு மனசாட்சியே இல்லாமல் சிரித்தபடி, 'சரியாக தூக்கில் தொங்கு' என கூறியபடி மனைவி தற்கொலை செய்வதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

தனது மனைவி தன் கண்முன்னே தூக்கில் துடிதுடித்து தொங்குவதை கண்டும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. கிருஷ்ணவேணி இறந்த பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மனைவி தூக்கில் தொங்குவதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக வந்த அவர்கள் கதவை உடைத்து கிருஷ்ணவேணியை மீட்டு சிகிச்சையாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு, கிருஷ்ணவேணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் சீனிவாசலுவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 06 மாதங்களாக தற்கொலை செய்து கொள்வேன் என மனைவி மிரட்டி வந்ததாகவும், தற்போதும் என்னை மிரட்டுவதற்காக தூக்கில் தூங்குவது போல் நடிக்கிறார் என நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அவர் தூக்கில் தொங்கி இறந்து விட்டார் என தெரிவித்த்துள்ளார்.

அப்போது, போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மனைவி தூக்கில் தொங்குவதை சிரித்தபடியே தூக்கில் தொங்கு கூறி, வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cruel Husband Laughingly Films Wife Hanging Herself


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->