ராமநாதபுரத்தில் 180 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது.!!
four peoples arrested for kanja kidnape in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேதாளை வடக்கு கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக சென்னை மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதாளையைச் சேர்ந்த ஆர். சதீஸ்வரன், என்பவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டது.
அந்த விசாரணையின் படி போலீசார், வைகை நகர் ரெயில் பாதை அருகே உள்ள முட்புதர்களில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் வெத்தலை பகுதியைச் சேர்ந்த எஸ். காமேஷ், கே. வினோத் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேதாளை பகுதியைச் சேர்ந்த சசி மற்றும் கோபி ஆகியோர், வட மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இருப்பினும் போலீசார் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four peoples arrested for kanja kidnape in ramanathapuram