ரோட்டுக்கடை ஸ்டைலில் ஈஸியான இட்லி சாம்பார்.!!
idly sambar recepie
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு
* சின்ன வெங்காயம்
* தக்காளி
* பூண்டு
* பச்சை மிளகாய்
* பெருங்காயத் தூள்
* கேரட்
* பரங்கிக்காய்
* சாம்பார் தூள்
* மஞ்சள் தூள்
* கறிவேப்பிலை
* கொத்தமல்லி
* தண்ணீர்
* உப்பு
* எண்ணெய்
* மிளகு
* கடுகு
* சீரகம்
* வெந்தயம்
* வரமிளகாய்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கேரட், பரங்கிக்காய், மஞ்சள் தூள், சாம்பார் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பருப்பை மசித்து மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு வாணலை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் சாம்பாரை கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ரோட்டுக்கடை ஸ்டைலில் சாம்பார் தயார்.