'டீ' குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கனுமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


நம்மில் பலரின் நாளை தொடங்கச் செய்யும் அதிரடி தோழன் — ஒரு டீ கப்! ஆனால், வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் வருமாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

டீயில் உள்ள காஃபின், டானின் போன்ற அமிலங்கள் வயிற்றில் அசிடிட்டியை அதிகரித்து, எரிச்சல், செரிமான கோளாறுகள் போன்ற சிக்கல்களை உண்டாக்கக் கூடும். அதனால், டீ குடிக்கும் முன்பு முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு ஒரு கப் வெதுவெதுப்பான நீர் அல்லது இளநீர் குடித்துவிட்டு டீ குடிப்பது நல்லது. இதனால் வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மை சீராகி, டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

டீ குடிக்கும் முன் சிறிய அளவு சிற்றுண்டி அல்லது பழம் சாப்பிட்டாலும் அமிலத்தன்மை பிரச்சனையை தவிர்க்கலாம். சிலருக்கு, இதையெல்லாம் செய்தாலும் பிரச்சனை நீடித்தால், பால் டீயை தவிர்த்து மூலிகை டீ, கிரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றை முயற்சிக்கலாம்.

மேலும், பால் டீ தவிர்க்க முடியாதவர்கள், தேயிலைத் தனியே கொதிக்க வைத்து பின் பால் சேர்த்து குடிப்பதே சிறந்தது. இல்லையெனில் பால் உள்ள லாக்டிக் அமிலம் கூட அசிடிட்டியை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

ஆனால் ஒரு விஷயம் மறக்கக் கூடாது — காலை வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வரும் பிரச்சனைக்கு தண்ணீர் மட்டும் போதாது. பகலில் அதிக எண்ணெய், காரம், ஜங்க் புட்ஸ் சாப்பிட்டாலும் அசிடிட்டி பிரச்சனை அதிகரிக்கும். அதனால் உணவு பழக்கத்தையும் கட்டுப்படுத்தினால் தான் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்று இரைப்பை நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Should you drink water before drinking tea Shocking information from experts


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->