மீந்துபோன சாதத்தில் மாலை நேர சூடான ஸ்னாக்ஸ்.!!
evening snacks recepie
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம்
* தயிர்
* உப்பு
* சீரகம்
* பச்சை மிளகாய்
* இஞ்சி
* அரிசி மாவு
* கறிவேப்பிலை
* பேக்கிங் சோடா
* தண்ணீர்
* எண்ணெய்
செய்முறை:
* முதலில் மிக்சி ஜாரில் மீந்து போன சாதம், தயிர், உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, அரிசி மாவு சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார் செய்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான போண்டா தயார்.