ஆந்திரா, கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு ..! - Seithipunal
Seithipunal


பீகாரை தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக பீகார் சட்டமன்ற தேர்தலில்ன் போதும், அதனை தொடர்ந்து,  02-வது கட்டமாக தமிழகம், கேரளம், மேற்குவங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் தீவுகள் என யூனியன் பிரதேசங்களுக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இந்த எஸ்.ஐ.ஆர். திருத்தத்தின்படி, தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், சண்டீகர், தாத்ரா-நகர் ஹவேலி, டாமன்-டையூ, அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Commission announces special revision of electoral rolls in 22 states and union territories including Andhra Pradesh and Karnataka


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->