வாசனை மற்றும் சுவை அறியும் திறனை இழந்துள்ளதாக நடிகர் மம்மூட்டி உருக்கம்; ரசிகர்கள் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில்  முக்கியமாக நடிகர் மம்மூட்டி, இவர், 'கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த தொண்டு நிறுவனத்தின் 16-வது ஆண்டு விழா கொச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக 'Cochlear Implant' அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை மம்முட்டி தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் இந்த நிகழ்வில் பேசுய அவர் கூறியதாவது: 'நீண்ட காலமாக என்னால் எந்த வாசனையையோ, எதன் சுவையையோ உணர முடியவில்லை. அந்தத் திறன்களை நாம் இழக்கும் போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்றும், அதுபோல கேட்கும் திறன் என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் மம்மூட்டியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவரே தனது உடல்நிலை குறித்து அவர் பேசியுள்ள்ளார்.

இந்த சூழலில், மம்மூட்டி தற்போது மோகன்லாலுடன் இணைந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் 'பேட்ரியாட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Mammootty says he has lost his sense of smell and taste


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->