அஜித் பவாரின் மரணம் குறித்து ஜெய் பவார் சந்தேகம்; பிளாக் பாக்ஸ் எளிதில் அழிந்துவிடக் கூடியது இல்லையே என கேள்வி..?
Jai Pawar doubts Ajit Pawars death
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அப்போது அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், உள்ளாட்சிகளில் மஹாராஷ்டிராவில் ஆளும் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் பகிரங்கமாக விமர்சித்து வந்தார். இந்த சூழலில், அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. இந்த கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான எப்படி விபத்துக்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும்.
இந்நிலையில் அஜித் பவார் சென்ற விமான விபத்து குறித்து, அவரது மகன் ஜெய் பவார் சந்தேகம் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதவில் கூறியுள்ளதாவது:
"விமானத்தின் பிளாக் பாக்ஸ் அவ்வளவு எளிதில் அழிந்துவிடக் கூடியது அல்ல. மகாராஷ்டிர மக்களுக்கு இந்த விபத்தின் முழுமையான மற்றும் வெளிப்படையான உண்மையை அறியும் உரிமை உண்டு.
விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு உடனடியாகத் தடை விதித்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, தற்போதைய துணை முதல்வரும், அஜித் பவாரின் மனைவியுமான சுநேத்ரா பவார் மற்றும் சகோதரர் பார்த் பவார் ஆகியோர் முதல்வர் பட்நாவிஸை சந்தித்து இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Jai Pawar doubts Ajit Pawars death