ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதாக ஆத்திரம்; 'ராகுலை வீடு புகுந்து கொல்வேன்' என மிரட்டிய நபர்; 'பாஜ ஒரு கோட்சே தொழிற்சாலை'; காங்கிரஸ் விமர்சனம்..!
Congress criticizes BJP as a Godse factory
கர்ணி சேனா என்ற வலதுசாரி அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ் சிங் என்ற அந்த நபர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதால் காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேர் மீதும் அவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய ராகுல் காந்தி மீதும் பாஜக மற்றும் கர்ணி சேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், உங்கள் வீட்டிற்குள் புகுந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம்" என்று வீடியோ ஒன்றில் பேசிய ராஜ் சிங், மிரட்டியிருந்தார்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "பாஜக-ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு என்பது ஒரு 'கோட்சே தொழிற்சாலை'. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளதோடு, இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா? என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Congress criticizes BJP as a Godse factory