தமிழக பட்ஜெட் தயாரிப்பு தீவிரம்! 2500 மகளிர் உரிமை தொகை அறிவிப்பு வருமா? விஜய் அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்! - Seithipunal
Seithipunal


சென்னை: 2026–27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் முழுமையான பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜூலை மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதற்காக தலைமைச் செயலாளர் சாய்குமார், அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி, ஜூலை 2 முதல் 22-ஆம் தேதி வரை 20 நாட்கள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். காலை 11.30 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கும் இந்தக் கூட்டங்கள் தலா 45 நிமிடங்கள் நடைபெறும். சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களும் இதில் பங்கேற்பார்கள்.

ஜூலை 2: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

ஜூலை 3: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை; நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

ஜூலை 6: உயர்கல்வித் துறை; பள்ளிக்கல்வித் துறை

ஜூலை 7: சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

ஜூலை 8: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை; பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

ஜூலை 9: தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

ஜூலை 13: வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை; பொதுப்பணித் துறை; நீர்வளத்துறை

ஜூலை 14: கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

ஜூலை 15: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

ஜூலை 16: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை; சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

ஜூலை 17: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை; தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

ஜூலை 20: சுற்றுலா, கலாசாரம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை; சமய அறநிலையத் துறை

ஜூலை 21: மனிதவள மேலாண்மைத் துறை; இயற்கை வளங்கள் துறை

ஜூலை 22: திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை; உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு துறையும் தங்களது முக்கியத் திட்டங்கள், செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நிதி முன்மொழிவுகள் உள்ளிட்ட விவரங்களுடன் 20 ஸ்லைடுகள் கொண்ட விளக்கக் காட்சியை தயாரிக்க வேண்டும். அவை தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்குப் பிறகு, ஆய்வுக் கூட்டத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, முதியோர் மாத ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக அதிகரிப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இருப்பினும், இதுகுறித்து அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intensive preparations for the Tamil Nadu budget Will the announcement regarding the 2500 women entitlement allowance be made The first budget to be presented by the government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->