அடுத்த 07 ஆண்டுகளில் AI துறைக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீடு; டெல்லி AI மாநாட்டில் முகேஷ் அம்பானி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டார். அப்போது அடுத்த 07 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது: 

ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், இனி வெளிநாடுகளிடம் இருந்து இந்தியா தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முதலீட்டின் மூலம் 'ஜியோ இண்டெலிஜென்ஸ்' என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்தவுள்ளதாகவும், குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்கள், நாடு முழுவதும் அதிவேகமான மற்றும் குறைந்த செலவிலான ஏஐ சேவைகளை வழங்க 'எட்ஜ் கம்ப்யூட்டிங்' வசதி ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mukesh Ambani announces Rs 10 lakh crore investment in AI sector at Delhi AI conference


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->