பிரதமர் மோடி - வெனிசுலா அதிபர் சந்திப்பு; எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக கிழக்கு மண்டல செயலாளர் ருத்ரேந்திர டாண்டன் கூறியதாவது;

''பிரதமர் நரேந்திர மோடியுடன் வெனிசுலா தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆய்வை மேற்கொண்டனர். மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தனர்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை கொண்டுள்ள வெனிசுலா, அந்த நாட்டின் எரிசக்தித்துறை ஒரு அடிப்படை மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி கூட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எரிசக்தியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு நிலையான இறக்குமதியாளராக இருக்க முடியும் என வெனிசுலா கருதுகிறதாகவும், எரிசக்தியைத் தவிர்த்து, கால்நடை வளர்ப்பு, போக்குவரத்து, விவசாய உபகரணங்கள், ஆட்டோமொபைல் துறை, மருந்துத் துறை போன்ற பிற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த உரையாடலின்போது, பரஸ்பர நலன்சார்ந்தும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும்,  இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், உலகின் தென் பகுதியின் நலன்களை மேம்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சக கிழக்கு மண்டல செயலாளர் ருத்ரேந்திர டாண்டன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Venezuelas Interim President Meets with Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->