'என்னவானாலும் தவெக அரசு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் உள்ளார்களா..?' கனிமொழி கேள்வி..! - Seithipunal
Seithipunal


''தொடரும் குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதல்வர் விஜய், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi questions whether the criminals are emboldened by the belief that the DMK government will not take action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->