டி20 உலகக் கோப்பை: இப்ராகிம் சட்ரான் அதிரடி; கனடாவை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்..!
Afghanistan beat Canada by 82 runs
10-வது டி 20 உலக கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், கனடா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. போட்டியில், டாஸ் வென்ற கனடா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 04 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரான் அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் குவித்தார். அவருடன், செடிகுல்லா அடல் 44 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும் எடுத்தனர்.
கனடா அணி, சார்பில் ஜஸ்கரன் சிங் 03 விக்கெட் டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 201 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கனடா அணி களமிறங்கியது.

அணியின் ஹர்ஷ் தாக்கர் 30 ரன்னும், சாத் பின் ஜாபர் 28 ரன்னும் அதிகபட்சமாக எடுத்தனர். கடைசி நியூசிலாந்து போட்டியில் 110 ரன்கள் அடித்த, யுவராஜ் சம்ரா 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
அதேபோன்று இன்றை போட்டியில் இருந்து, விடைபெற்ற தலிவால் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தமை அவரது அணியினரை சோகத்தில் ஆழ்த்தியது.
இறுதியில், கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 04 விக்கெட்டும், ரஷித் கான் 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக இப்ராகிம் சட்ரான் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
Afghanistan beat Canada by 82 runs