'திமுக அரசு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பை உருவாக வேண்டும் என்பது பாஜகவின் ஏக்கம்'; திருமாவளவன் பேட்டி..!
Thirumavalavan says that the BJPs desire is to create hatred among the people towards the DMK government
எப்படியாவது திமுக அரசு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு உருவாக வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஆவர் மேலும் கூறியதாவது:
தமிழக அரசு கொண்டு வந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட். இதில் எந்த திட்டத்தையும் அறிவிக்க மாட்டார்கள் என்றும், புதிதாக எந்த திட்டத்தையும் அறிவிக்கிறது கிடையாது. அது வழக்கமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, அரசியலுக்காக பாஜவினர் திமுக அரசை விமர்சித்து பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எப்படியாவது திமுக அரசு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு உருவாக வேண்டும் என்பது அவர்களின் ஏக்கமாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளதோடு, அது இங்கு சாத்தியமாகாது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ்-சும் இந்தியாவுக்கு எவ்வளவு ஆபத்தான சக்தி என்பதை கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் தொடர்ந்து நாடு முழுக்க, உலகம் முழுக்க பேசி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவர், காங்கிரஸ் கட்சியை, அதன் தலைவர் ராகுல் காந்தியை ஆபத்தானவர் என்று விமர்சிப்பது நகைச்சுவையாக இருக்கிறது என்று பேட்டில் திருமா தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan says that the BJPs desire is to create hatred among the people towards the DMK government