தவெக கூட்டணியில் விசிக! வாக்கு தவறிய திருமாவளவன்! கம்யூனிஸ்ட் முடிவுதான் எங்கள் முடிவுன்னு சொன்னது? கம்யூனிஸ்ட்டுகள் சமாரி அட்டாக்
VCK in the TVK alliance Thirumavalavan goes back on his word! What happened to the claim that the Communists decision is our decision The Communists launch a scathing attack
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 30-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகக் கூறிய திருமாவளவன், தற்போது தவெகவுக்கு ஆதரவாக நிற்பது குறித்து கம்யூனிஸ்ட் ஆதரவாளரும் பேராசிரியருமான அருணன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், விசிகவும் இடம்பெற்றிருந்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. இதையடுத்து, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தங்களது மாநில அளவிலான ஆலோசனைகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
அப்போது விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன முடிவு எடுக்கின்றனவோ அதையே தங்களது கட்சியும் பின்பற்றும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஆட்சி அமைப்பதற்கான காலக்கெடு நெருங்கியபோது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது முடிவை அறிவித்த நிலையிலும், விசிக தனது நிலைப்பாட்டை உடனடியாக அறிவிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விசிக தனியாக கட்சி என்பதால் கட்சிக்குள் ஆலோசனை நடத்தித்தான் முடிவு எடுக்க முடியும் என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடும் சூழலில், விசிக தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததன் காரணமாகவே இடைத்தேர்தல் நடைபெறுவதாகவும், இதுபோன்று தேர்தலை ஏற்படுத்துவது ஜனநாயக விரோதம் என்றும் கூறி கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
இதனை சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் அருணன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டையே தாங்களும் பின்பற்றுவோம் என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில், தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் இடைத்தேர்தல் களத்தில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
VCK in the TVK alliance Thirumavalavan goes back on his word! What happened to the claim that the Communists decision is our decision The Communists launch a scathing attack