Two Legends One Frame; ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு..!
Rajinikanth and Kamals film poster released
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 173-வது படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கஉள்ள நிலையில், கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனையடுத்து, ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். தற்போது இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை பீஸ்ட், ஜெய்லர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ஜெயிலர் 02 திரைப்படமும் விரைவில் வெளிவரவுள்ளது.
கமல்- ரஜினி இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தை துணை முதலமைச்சர் உதயநிதி மகன் இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இரவு 07.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதாவது, கமலின் பிறந்த நாளான 07 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 07.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு, நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஜினி நெல்சன் இயக்கத்தில், தற்போது ஜெயிலர்-02 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Rajinikanth and Kamals film poster released