நடிகர் யஷ் ‘கேங்ஸ்டர் அவதாரம்...! டாக்ஸிக் பட டீசர் நாளை... ரசிகர்கள் உற்சாகம் உச்சம்...! - Seithipunal
Seithipunal


கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் முன்னணி கதாபாத்திரமாக நடித்துவரும் புதிய திரைப்படம் டாக்ஸிக்.1940 முதல் 1970 வரை கோவா பகுதியில் வேரூன்றிய போதைப்பொருள் கடத்தல், அண்டர்வேர்ல்ட் மாஃபியா கும்பல்கள் மற்றும் குற்ற உலகத்தின் இருண்ட பின்னணியை மையமாகக் கொண்டு, அதிரடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மேலும், கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

மேலும், பன்மொழி வெளியீடாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக, இப்படத்தின் டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Yash Gangster Avatar Toxic teaser tomorrow Fans excited


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->