குண்டு என கூறி அவமானப்படுத்திய நண்பர்கள்: 20 கி.மீ. துரத்தி துப்பாக்கியால் சுட்ட நபர்..!
Friends teased him for being fat 20 km The person fired the gun
உத்தர பிரதேசத்தில் விழா ஒன்றில் குண்டாக இருப்பதாக நண்பர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த நபர், இருவரையும் 20 கி.மீ., தொலைவு துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் தர்குலஹா தேவி கோவிலில் விழா ஒன்று நடைபெற்ற போது, அந்த விழாவில் கலந்து கொள்ள அர்ஜூன் சவுகான் என்பவர் வந்துள்ளார். அவருடன் உறவினர் ஒருவரும் வந்துள்ளார். இவர்களுடன், அர்ஜூன் சவுகான் நண்பர்கள் அனில், சுபம் ஆகியோரும் கோவிலுக்கு வந்துள்ளனர்.

விழாவில் அவர்கள் அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது அனில், சுபம் இருவரும், அர்ஜூன் சவுகானின் உடல் பருமனை பற்றி கேலியாக பேசியுள்ளனர்.
அத்துடன், அவர்கள் கிண்டலடிப்பதை பார்த்த அங்கிருந்தவர்களும் நகைத்துள்ளனர். இதனால் அர்ஜூன் சவுகான் தாம் அவமானப்படுத்தப்பட்டதாக ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை தமது மற்றொரு நண்பனான ஆசிப் என்பவரின் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பழிவாங்க இருவரும் திட்டமிட்டு, நண்பர்களான அனில், சுபம் எங்கு செல்கின்றனர் என்று கண்காணித்துள்ளனர். அப்போது, அவர்கள் மன்ஜாரியா என்ற பகுதியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்ததை தெரிந்துகொண்டனர். பின்னர் அவர்களை நடுவழியில் நிறுத்த முயற்சித்த போது, அதை மீறி இருவரும் வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர்.
அவர்களை பின்னாடியே துரத்தி கிட்டத்தட்ட 20 கி.மீ., தொலைவு துரத்திச் சென்று பிடித்து, காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்டுள்ளனர். பின்னர் கையில் இருந்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அர்ஜூன் சவுகானை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Friends teased him for being fat 20 km The person fired the gun