வேலைக்கு செல்வதாக ஏமாற்றிவிட்டு சென்ற மனைவி; வேறொருவருடன் திருமணம்: வீடியோவை பார்த்து கதறிய கணவர்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில், வேலைக்கு செல்வதாக கணவனை ஏமாற்றிவிட்டு  மனைவி வேறொரு நபருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். இது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பார்த்த கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன், தனது மனைவியை மீட்டு தருமாறு அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் அஜித்குமார். கொத்தனாராக வேலை செய்கிறார். இவருக்கும் குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சேர்ந்த அபிஷா  என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் குலசேகரத்தில் உள்ள அபிஷாவின் வீட்டிலேயே வசித்து வந்தனர். 

இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தாலும், இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியில் சேர்ந்துள்ளார். இதன் காரணமாக அபிஷா சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து பணிபுரிவது வழக்கம். அந்த வகையில் கடந்த 02-ஆம் தேதி முதல் 09-ஆம் தேதி வரை தனக்கு மருத்துவமனையில் தங்கியிருந்து வேலை இருப்பதாக கூறிவிட்டு அபிஷா வேளைக்கு சென்றுள்ளார்.

வேளைக்கு சென்ற மனைவிக்கு அபிஷாவுக்கு கடந்த 06-ஆம் தேதி அஜித் குமார் செல்போனை தொடர்புகொண்ட போது,சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மருத்துவமனை நிர்வாகத்துக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் கூறியதாவது: 

அபிஷா திடீரென நேற்று உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி லீவு கேட்டதாகவும், தன்னை அழைத்து செல்ல உறவினர் ஒருவர் வருவார் எனக்கூறியதாகவும் தெரிவித்துள்ளார். . அத்துடன், உறவுக்காரன் எனக்கூறி 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்ததாகவும், அவனுடன் அபிஷா பைக்கில் ஏறி சென்றதாக கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஜித்குமார் அப்படி யாருக்கும் உடல்நிலை சரியில்லையே என குழம்பியதோடு, கடந்த 07-ஆம் தேதி அவர் அருமனை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷாவை தேடி வந்தனர்.

இதற்கிடையே நண்பர் ஒருவர் அஜித் குமாரை தொடர்புகொண்டு நண்பா உனக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டுள்ளார். அத்துடன்,  உனக்கும், உன் மனைவிக்கும் ஏதேனும் பிரச்னையா? பிரிந்து வாழ்கிறீர்களா? என்று கேட்க அஜித்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும், நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்கிறோம் நாங்கள் ஏன் பிரியப் போகிறோம். ஆனால், என் மனைவியை காணவில்லை. அவர் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பன் அவருக்கு இன்ஸ்டாகிராமுக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த அஜித் குமார் நிலைகுலைந்து போயுள்ளார்.

அதில்,  தனது மனைவி அபிஷா வேறு நபருடன் கோயிலில் வைத்து மாலையும் கழுத்துமாக திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் அதில் இருந்துள்ளது. பின்னர் தனது மனைவி அபிஷா காணாமல் போனது மற்றும் வேறு ஒருவரை திருமணம் செய்த வீடியோவை காண்பித்தும் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் தற்போது அபிஷா எங்கு உள்ளார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife cheated on him by saying she was going to work and left Husband cried after seeing video of her getting married to someone else


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->