ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது...! அடுத்த 3 நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை தான்...! - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட் - Seithipunal
Seithipunal


வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வானிலை மாற்றம் வட மாநிலங்களில் பருவமழையை மேலும் தீவிரப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்துள்ளது.

இந்த வானிலை அமைப்பு அடுத்த 3 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் வட இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மேலும் வேகமெடுத்து தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் தாழ்வான பகுதிகளில் நீர்த்தேக்கம், வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

deep depression formed Heavy rains expected next 3 days Latest update from Meteorological Department


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->