திருச்சியில் கொடூரம் : பேருந்து சக்கரம் ஏறி துண்டான பெண்ணின் 2 கால்கள்.!!
woman two leg missing for bus accident in trichy
திருச்சியில் கொடூரம் : பேருந்து சக்கரம் ஏறி துண்டான பெண்ணின் 2 கால்கள்.!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் நேற்று திருச்சி காந்தி மார்கெட் வெங்காயமண்டி அருகே மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது, பேருந்து ஓட்டுனர் நிர்மலா ஏறுவதைக் கவனிக்காமல் பேருந்தை எடுத்துவிட்டார். இதனால் அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில், நிர்மலாவின் இரண்டு கால்களிலும் சக்கரங்கள் ஏறி இறங்கியது.

இதனால் படுகாயமடைந்த நிர்மலா வலியில் அலறி துடித்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனவர்களை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொதுமக்களிடமிருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
woman two leg missing for bus accident in trichy