6 ஆயிரம் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை!கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி கொடுத்தது வாக்கு அரசியலா? - மு.க.ஸ்டாலின்
Was the provision of funds to children who lost their parents to Corona a voter politics MK Stalin
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கான “அன்புக்கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், அந்தக் குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பள்ளிப் படிப்பு முடிந்த பின் கல்லூரிக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:“சாதாரண மக்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம். அரசியல் என்பது மக்களுக்கான பணி; இங்கு சொகுசுக்கு இடமில்லை.”“சிலர், அரசியல் என்பது பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டங்கள் அறிவிப்பதாக கருதுகின்றனர். ஆனால் நாங்கள் மக்களுடன் மக்களாக இருப்பதால், அவர்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.”
“கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கினோம். இப்போது, அதே உறுதிப்பாட்டுடன் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம்.”
இந்தத் திட்டத்தில் 6,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.”“அன்புக்கரங்கள் திட்ட நிகழ்வில் குழந்தைகள் பகிர்ந்த சிரிப்புதான் அண்ணாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.எளியோருக்கான காலை உணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், இவை எல்லாம் வாக்கு அரசியலா? மக்கள் நலனுக்கான பணி தான் அரசியல்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.
English Summary
Was the provision of funds to children who lost their parents to Corona a voter politics MK Stalin