குளிக்கும் போது வீடியோ.. காலில் விழுந்து கதறிய சிறுமி.. காமுகன்களின் கொடூரத்தால் துடிதுடிக்க அரங்கேறிய விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பாகாயம் அருகேயுள்ள கிராமத்தைச் சார்ந்த 15 வயது மாணவி, அங்குள்ள பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அவரது வீட்டின் மேற்கூரை இல்லாமல் இருக்கும் குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்துள்ளார். 

இதனை அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பூனைக் கண்ணன் என்கிற ஆகாஷ் (வயது 22) மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ள 17 வயது சிறுவர்கள் 2 பேர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் மாணவியிடம் சென்று தாங்கள் அழைக்கும் பகுதிக்கு தனியாக வரும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் கூறியதை ஏற்க மறுத்த மாணவி பிரச்சனை செய்யவே, செல்போனில் மாணவி குளிக்கும் வீடியோவை காண்பித்துள்ளனர். 

இதனால் மாணவி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், மாணவியின் உறவினர் ஒருவருக்கும் இது குறித்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர். மாணவி உடனடியாக சுதாரித்து வாட்ஸப்பில் வந்த வீடியோவை அழித்த நிலையில்,  மூவரிடமும் வீடியோவை அழித்து விடும்படி கண்ணீருடன் காலில் விழுந்து கேட்டுள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ளாத காமுக கொடூரன்கள், தாங்கள் அழைக்கும் இடத்திற்கு நீ தனியாக வந்தால் வீடியோ அழிக்கப்படும் என்றும், வீடியோ குறித்து யாரிடமும் கூறினால் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வோம் என்றும் கூறியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி செய்வதறியாது இருந்து வந்த நிலையில், நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்து, மாணவி வலியால் துடித்த நிலையில், இவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு காமுக குற்றவாளிகளான ஆகாஷ் உட்பட பள்ளி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore child girl suicide attempt culprit warn takes bath video


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal