அனிதாவை கொலை செய்த வடு மறையாது! உதயநிதி பரபரப்பு டிவிட்!
Udhay Say about NEET And Anita
நீட் தேர்வில் தோல்வியடைந்து, மருத்துவம் படிக்கமுடியாத வேதனையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், அனிதா மரணத்தை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு 6 வருடங்கள் ஆகின்றன.
1,000 ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும்.

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன்.
நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஏஎன்ஐ செய்தி செய்தி நிறுவனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், “ஆரிய மடலுக்கு திராவிட மடலுக்கு உள்ள சிறந்த வித்தியாசம் தான், மணிப்பூர் வாள்வீச்சு வீரர்கள் மற்றும் அணிக்கு எப்படி அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்பது சிறந்த உதாரணம்.
இங்கு (தமிழகத்தில்) பாதுகாப்பாக அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள், பயிற்சி செய்கிறார்கள், இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுவே மணிப்பூர் ஆரிய மாடலுக்கு, தமிழ்நாடு திராவிட மாடலுக்கு உள்ள வித்தியாசம்" என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
English Summary
Udhay Say about NEET And Anita