நல்லாட்சி நடந்து வரும் தமிழ்நாட்டில் சங்கிகளுக்கு இடம் இல்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்படுவதோடு, இந்த ஆண்டுக்குள் 200 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இங்குள்ள கோயில்களில் பல்வேறு பணிகளுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக ஆடிச்சியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதோடு, மகாதேவர் கோயிலில் கடந்த 2022-ஆம் ஆய்வு நடத்தப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் பேசுகையில், 'மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலிலும் ரூ.1.38 கோடியில் பணிகள் நடத்தப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்தாண்டுக்குள் தமிழகம் முழுவதும் 200 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நல்லாட்சி நடந்து வரும் தமிழ்நாட்டில் சங்கிகளுக்கு இடம் இல்லை.' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no place for Sangis in Tamil Nadu where good governance is underway Interview with Minister Sekarbabu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->