15 மனைவியர், 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என, பரிவாரங்களுடன் வந்த ஆப்பிரிக்க மன்னர்: ஸ்தம்பித்து போன விமான நிலையம்..! - Seithipunal
Seithipunal


தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டியின் வருகையால்  அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதியுற்றுள்ளனர்.

அவர் தனது, 15 மனைவியர், 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என, 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் அபுதாபி வந்திறங்கியுள்ளார். இதனால், அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்து போன காட்சிகள் வெளியாகி உள்ளன.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி விமான நிலையத்துக்கு வந்த விமானதில் அரைகுறை ஆடையுடன்  அவர், பல பெண்களுடன் தனி விமானத்தில் வந்திறங்கியுள்ளார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் மரியாதையாக வணங்கி, வீர வணக்கம் செலுத்தும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கும் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி,1986 முதல் எஸ்வாட்டினியை ஆண்டு வருகிறார். 57 வயதாகும் அவருடைய நாட்டின் பாரம்பரிய புலித்தோல் உடையில் வந்திறங்கியுள்ளதோடு, அவரது 15 மனைவியர், 30 குழந்தைகள் வண்ணமயமான ஆப்பிரிக்க உடைகளில் வந்துள்ளனர்.

இவர், பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடத்துவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வருகைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது தந்தை, முன்னாள் ஸ்வாசிலாந்து மன்னர், 125 மனைவியர் மற்றும் 210 குழந்தைகள், 1,000 பேரக்குழந்தைகளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

தற்போதைய மன்னர் மூன்றாம் மஸ்வாட்டிக்கு 30 மனைவியர் உள்ள நிலையில், இந்த பயணத்தில், 15 மனைவியர் மட்டுமே உடன் வந்துள்ளனர். இவருக்கு, 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 'ரீட் டான்ஸ்' எனும் பாரம்பரிய விழாவில் புதிய மனைவியை மன்னர் தேர்ந்தெடுக்கும் பழக்கம், உலகளவில் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

ஆனாலும், எஸ்வாட்டினியில் மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். நாட்டில் வறுமை மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும் நிலையில், மன்னர் மஸ்வாட்டி உள்நாட்டிலும் விமர்சிக்கப்பட்டு வரும் ஒருவராகவுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abu Dhabi airport was brought to a standstill by an African king who arrived with 15 wives and 30 children


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->