மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் அதிரடி! -பைசன் படத்தை கண்டிப்பாக பாருங்கள் என வேண்டுகோள்
Dhruv Vikrams action direction Mari Selvaraj request definitely watch film Bison
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'துருவ் விக்ரம்' நடிப்பில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம், தீபாவளி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், பா. ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும்.

இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். மேலும் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது முழுமையாக தயாராகி, அதன் ப்ரோமோஷன் பணிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்வில் நடிகர் துருவ் விக்ரம் உரையாற்றியபோது, அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்ததாவது,"நான் இதுவரை 2 படங்களில் நடித்துள்ளேன். அவற்றை நீங்கள் பார்த்திருக்காவிட்டாலும் பரவாயில்லை… ஆனால் ‘பைசன்’ படத்தை கண்டிப்பாக பாருங்கள்.
இதைத்தான் என் உண்மையான முதல் படம் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படம் என் மனதிற்கும், உங்களின் மனதிற்கும் மிக நெருக்கமானதாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.மேலும் அவர் இது குறித்து தெரிவித்ததாவது,"இந்தப் படத்திற்காக முழு படக்குழுவும் இரவும் பகலும் உழைத்துள்ளது.
நான் எனது 100 சதவீத உழைப்பை இதில் கொடுத்துள்ளேன். இயக்குநர் மாரி செல்வராஜ் ஒவ்வொரு காட்சியையும் உயிருடன் உருவாக்கியிருக்கிறார். அந்த அன்பும் அர்ப்பணிப்பும் பார்வையாளர்களிடம் சேரட்டும். ‘பைசன்’ படத்தை திரையரங்கில் சென்று பார்த்து அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Dhruv Vikrams action direction Mari Selvaraj request definitely watch film Bison